200 கிலோ உடல் பருமனான நோயாளியை மருத்துவமனையில் சேர்க்க உதவிய பொது தற்காப்பு படையினர்

கெடா, ஜூலை 31-

கெடா, சுங்கை பெட்டானி -யில், 200 கிலொகிராம் உடல் பருமனான நோயாளியை, நேற்றிரவு அவரது வீட்டிலிருந்து சிக்-கிலுள்ள மலேசிய பொது தற்காப்பு படையினர், சிறப்பு சேவையின் வழி, சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

பக்கவாதத்திற்கு இலக்காகியுள்ள அவ்வாடவர், நேற்றிரவு மணி 10 அளவில் உறங்கவைக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை பணியாளர்களின் உதவியுடன் பொது தற்காப்பு படையின் 6 உறுப்பினர்கள், லோரியின் வாயிலாக, அவ்வாடவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, அவருக்கு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.

WATCH OUR LATEST NEWS