கோத்தா பாரு, ஜூலை 31-
கிளந்தான், கோத்தா பாரு-வில், கடந்த மார்ச் 10ஆம் தேதி, தலையில் தேங்காய் விழுந்ததால், மண்டை ஓட்டில் விரிசல் ஏற்பட்டு 3 மாதங்கள் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட அப்துல் லத்தீஃப் இப்ராஹிம் எனும் 34 வயது ஆடவர், சுயநினைவுக்கு திரும்பினார்.
தனது தாயாரின் தோட்டத்தை தூய்மைப்படுத்த சென்ற போது நிகழ்ந்த அச்சம்பவத்தில், காயங்களுக்கு இலக்காகியிருந்த அவ்வாடவருக்கு, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் – USM-மின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அவரது தலையில், இடது புறத்திலுள்ள மண்டை ஓடு அகற்றப்பட்ட நிலையில், அவ்வாடவர் தற்போது படுத்த படுக்கையில் உள்ளார்.
குடும்ப தலைவருக்கு ஏற்பட்டுள்ள அக்கதியால், அக்குடும்பம் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.