சீனப்பள்ளிக்கு மதுபான நிறுவனம் நன்கொடை அளித்துள்ள விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சை, ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 31-

அண்மையில், சிலாங்கூர், செபாங்-ங்கிலுள்ள சீனப்பள்ளி ஒன்றுக்கு மதுபான நிறுவனம் நன்கொடை அளித்துள்ள விவகாரம், நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நன்கொடை குறித்து எழுப்பப்பட்டுவரும் சர்ச்சைகளால், சீன சமூகத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளதால், அது ஒற்றுமை அரசாங்கத்திற்கான அச்சமூகத்தினரின் ஆதரவை, பாதிக்கச் செய்யுமென டிஏபி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குவா கியா சூங் எச்சரிக்கை விடுத்தார்.

அண்மையில், பினாங்கு, சுங்கை பகாப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பக்காத்தான் ஹாராப்பான் கண்டுள்ள தோல்வி, ஒற்றுமை அரசாங்கத்தின் மீது, சீன சமூகத்தினர் நம்பிக்கையை இழந்து வருவதைக் காட்டுகின்றது.

அத்தேர்தலில், வெறும் 47 விழுக்காட்டு பதிவு பெற்ற சீன வாக்காளர்கள் வாக்களிக்க வெளியே வந்துள்ள வேளை, அவர்களில் 10 விழுக்காட்டினர் பெரிக்காதான் நசியனால்-லுக்கு வாக்களித்துள்ளனர்.

தற்போது, சீனப்பள்ளிக்கு மதுபான நிறுவனம் நன்கொடை அளித்துள்ளதை விமர்சிப்பதன் வழி, கல்வியில் தங்களுக்கான உரிமையில் தலையீடுகள் உள்ளதாகவே, அச்சமூகத்தினர் கருதுவதாக குவா கியா சூங் கூறினார்.

WATCH OUR LATEST NEWS