GERAKAN – PAS இடையிலான கருத்து முரண்பாடு, பேச்சுகளின் வழி தீர்வு காணப்பட வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 31

சீனப்பள்ளி ஒன்றுக்கு மதுபான நிறுவனம் நன்கொடை அளித்த விவகாரத்தை தற்காத்து பேசியுள்ள கெராகன் கட்சிக்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் மூண்டுள்ள கருத்து வேறுபாடு.

அவ்விவகாரத்தில் சுமூகமான தீர்வை எட்ட, அதனை பெரிக்காதான் நசியனால் கூட்டணியின் கூட்டத்திற்கு கொண்டு செல்ல போவதாக, கெராகன் கட்சி தலைவர் டொமினிக் லாவ் தெரிவித்துள்ளார்.

நடப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அவ்விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கூற்றுகளை முன்வைத்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், பெரிக்காதான் நசியனால்-லின் அனைத்து உறுப்புக் கட்சிகளையும் சேர்ந்த கடைநிலை உறுப்பினர்களை உட்படுத்தி, உள்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும் என்றார்.

WATCH OUR LATEST NEWS