குளுவாங், ஜூலை 31-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 62.4 ஆவது கிலோமீட்டரில் குளுவாங்கிற்கு அருகில் இன்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்த விபத்தில் லோரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
அந்த லோரி ஓட்டுநர் செலுத்திய லோரி, மற்றொரு லோரியின் பின்புறம் மோதி, விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே மாண்டார் என்று குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமது நார் தெரிவித்தார்.
Volvo மற்றும் Mercedes- Benz ரகத்திலான இரு லோரிகள் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தன. முன்புறம் சென்று கொண்டிருந்த Volvo லோரி, திடீரென்று பிரேக் போடப் பட்டதால் வேகக்கட்டுப்பாட்டை இழந்த Mercedes- Benz, அந்த லோரியுடன் மோதியதாக ஏசிபி பஹ்ரின் குறிப்பிட்டார்.
இதில் அலோர் ஸ்டார், கம்போங் தெலுக் யான்- னை சேர்ந்த 41 வயது லோரி ஓட்டுநர் முகமது பைசல் காலித் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டுள்ளது.