கோலா தெரங்கானு, ஜூலை 31-
மாற்றுத்திறனாளியான தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர் ஒருவருக்கு, 30 ஆண்டுகள் சிறை மற்றும் 30 பிரம்படித்தண்டனை விதிக்க கோலத்திரெங்கானு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
நீதிபதி முகமது ஜூல் ஜாகிகுடின் சுல்கிஃப்லி முன்னிலையில் 45 வயதுடைய அந்த நபருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அந்நபர் 2022 ஆம் ஆண்டு நள்ளிரவு 12 மணியளவில் டுங்குன்- னில் உள்ள ஒரு வீட்டில் தனது 12 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.