புத்ராஜெயா, ஜூலை 31-
பகாங், குவாந்தானில் உள்ள ஒரு வீடமைப்புத் திட்டம் தொடர்பாக மொத்தம் 11 கோடி வெள்ளி லஞ்சம் பெற்றதாக டத்தோ அந்தஸ்தைக் கொண்ட முக்கிய நபர் உட்பட மூன்று நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
SPNB எனப்படும் Syarikat Perumahan Negara Berhad- டின் துணை நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான டத்தோ அந்தஸ்தைக்கொண்ட நபரும், இதில் கைது செய்யப்பட்டுள்ளதாக SPRM வட்டாரம் தெரிவித்துள்ளது.
Syarikat Perumahan Negara Berhad- டின் இயக்குநர் வாரியத்தின் அங்கீகாரமின்றி குவாந்தான் மாவட்டத்தில் கோடிக்கணக்கான வெள்ளி பெறுமானமுள்ள வீடமைப்புத் திட்டத்தின் ஒப்பந்தம் நடைபெறுவதற்கு மேற்கண்ட மூன்று நபர்களும் கூட்டு சதி, செய்து, லஞ்சப் பணத்தை பெற்றதாக கூறப்படுகிறது.
கையெழுத்திடப்பட்ட இந்த வீடமைப்புத் திட்ட ஒப்பந்தத்தினால் நாட்டின் வீடமைப்பு கொள்கைக்கு ஏற்பட வீடமைப்புத்திட்டங்களை அமல்படுத்தி வரும் நிதி அமைச்சின் முக்கிய வீடமைப்புப் பிரிவான Syarikat Perumahan Negara Berhad- டிற்கு பல கோடி வெள்ளி இழப்பை ஏற்படுத்தும் நிலைக்கு வித்திடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.