கோலாலம்பூர், ஜூலை 31-
கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக சம்பளம் எதுவும் வழங்கப்படாமல், கொத்தடிமைகளைப் போல நடத்தப்பட்ட வந்தாக நம்பப்படும் மூன்று அந்நிய நாட்டுப் பணிப்பெண்களை போலீசார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
சிலாங்கூர், ஜாலான் பான்டிங், தெலுக் பங்லிமா கராங், பந்தர் ரிம்பாயு என்ற இடத்தில் இரண்டு மாடி வீட்டில் நேற்று இரவு 11 மணியளவில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அந்நிய நாட்டுப்பெண்கள் காப்பற்றப்பட்டுள்ளனர்.
இதில் இரண்டு இந்தோனேசியப் பெண்களும், ஒரு நேபாளிய பெண்ணும் மீட்கப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பெண்களை கொத்தடிமைகளாக வைத்திருந்ததாக நம்பப்படும் உள்ளூரை சேர்ந்த 62 வயது மாது மற்றும் 37 வயது ஓர் இந்தோனேசியப் பெண் ஆகியோர் கைது செய்யப்ப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டள்ளது.