கோலாலம்பூர், ஜூலை 31-
நாட்டின் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக தாம் பொறுப்பேற்று இருந்த காலத்தில் தேசிய விளையாட்டு மன்றம், ஸ்போர்ட்ஸ் டோட்டோ நான்கு இலக்கு எண் சூதாட்ட நிறுவனத்திடமிருந்து நிறைய நன்கொடைகளை பெற்று இருப்பதாக முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் இன்று அம்பலப்படுத்தினார்.
சீனப்பள்ளிகளுக்கு மதுபான நிறுவனம் நன்கொடைகள் வழங்கி வருவதை பெரும் சர்ச்சையாக்கி வரும் பாஸ் கட்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கைரி ஜமாலுடீன் இந்த புதிய சர்ச்சையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
Episot podcast keluar sekejap ஒளிப்பரப்பில் சர்ச்சைக்குரிய விவாதத்தை முன்வைத்த கைரி ஜமாலுடின், மலேசிய விளையாட்டு மன்றத்திற்கு அந்த சூதாட்ட நிறுவனம் வாரி வழங்கிய நிதியை அந்த நிறுவனத்தின் நிதி ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று கைரி ஜமாலுடின் குறிப்பிட்டுள்ளார்.