புத்ராஜெயா,ஆகஸ்ட் 01-
தனது கணவரின் மரணத்திற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு, மறு விசாரனை அவசியமாவதாக கூறிய விமலா தேவி , இதன் பிறகு, தடுப்புக்காவலில் மரணங்கள் நிகழக்கூடாது என்றார்.
கடந்த திங்கள்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை நிறைவுற்ற பிறகு, அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.
முன்னதாக,சேகர்-ரின் மரணம் மீதான விசாரணையின் முடிவு தொடர்பில், அரசாங்க தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை, மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வுக்கு தலைமைத்தாக்கிய நீதிபதி அஹ்மத் ஜைதி இப்ராஹிம் தள்ளுப்படி செய்தார்.
உணவு அங்காடி உதவியாளரான சேகர், கடந்த 2017அம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி, இரவு மணி 10.30 அளவில், அவரது நண்பருடன் போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
மறுநாள் காலையில், போர்ட் டிக்சன் மாவட்ட பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர், 3 நாள் தடுப்புக்காவலிடப்பட்டார்.
அதேநாள் மாலையில், இரு மணி நேரம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சேகர், விசாரணை முடிந்து தடுக்காவல் அறைக்கு சென்ற நிலையில், மறுநாள் அதிகாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.