பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 01-
கெளந்தன், நெங்கிரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்,பெர்சத்து-வைச் சேர்ந்தவரை பேரிக்காதான் நசியனால் கூட்டணியின் வேட்பாளராக களமிறக்கினால், தேர்தல் பணிப்படையினர், அத்தேர்தலை புறக்கணிக்கக்கூடும்.
அதனைத் தவிர்க்கும் முயற்சியாகவே, பாஸ் கட்சியின் முன்னாள் உறுப்பினரானமுகமது ரிஸ்வாடி இஸ்மாயில் , வேட்பாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக, பெர்சத்து-வைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெர்சத்து-வில் இணைந்த இரு நாள்களுக்கு பின்னர், ரிஸ்வாடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது, கட்சியில் உள்ள பல்வேறு தரப்பினரை அதிருப்திக்கு உள்ளாக்கினாலும், அம்முடிவு, இம்மாதம் 17ஆம் தேதி, தங்கள் கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும் என்றாரவர்.