மனைவி வெளிநாட்டில் மச்சானை கொன்ற சகோதரன்!

ஆகஸ்ட் 01-

சகோதரியின் கணவனை அலவாங்கினால் தலையில் தாக்கி கொலை செய்த மச்சானை கைதுசெய்துள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவமானது உனவட்டுன தலவெல்ல பிரதேசத்தில் இன்று (01) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

உயிரிழந்தவர் தலவெல்ல, உனவட்டுன பகுதியைச் சேர்ந்த கனேகொட கமகே ரத்னசிறி என்ற 54 வயதுடையவராவார்.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் பணி புரிந்து வருவதோடு, அவர் மனைவியின் இளைய சகோதரனுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையிஒல் உயிரிழந்தவர் நித்திரையில் இருந்த போது மனைவியின் சகோதரன் அலவாங்கினால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளமை பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS