உரிமம் இல்லாத சமூக வளைத்தள நடத்துநர்களுக்கு 5 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது 5 ஆண்டு சிறை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 01-

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து செல்லத்தக்க உரிமம் கொண்டிருக்காத சமூக வளைத்தள நடத்துநர்கள், கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

கட்டாய உரிமைத்தை கொண்டிருக்கும் இந்த புதிய விதிமுறையானது சமூக வளைத்தளங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

இது சமூக வலைத்தள பயனர்கள் அல்லது அதில் செல்வாக்குப்பெற்ற பிரபலங்களை முறைப்படுத்தும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை என்பதையும் ஃபஹ்மி ஃபாட்சில் தெளிவுபடுத்தினார்.

இந்த புதிய விதிமுறை அமலக்கு வந்தப் பின்னர் இதனை மீறுகின்ற சமூக வலைத்தள நடத்துநர்கள் மீது தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 126 ஆவது விதியின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்படுகின்றவர்களுக்கு 5 லட்சம் வெள்ளி அபராதம் அல்லது ஐந்து ஆண்டு சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஃபஹ்மி ஃபாட்சில் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS