கோலாலம்பூர், ஆகஸ்ட் 02-
ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிறிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே-யின் படுகொலையை கண்டிக்கவும் , பாலஸ்தீனத்திற்கு மலேசியா கொண்டுள்ள ஆதரவை புலப்படுத்தவும் வரும் ஞாயிற்றுக்கிழமை, புக்கிட் ஜாலில் Axiata அரங்கில் மாபெரும் பேரணி நடத்தப்படவிருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கம் அளித்துள்ளார்.
பாலஸ்தீனர்கள் விவகாரதிதில் மலேசியாவில் உறுதியான நிலைப்பாடு என்ன என்பதை இந்த மாபெரும் ஆதரவு பேரணியின் பிரதமர் விளக்கினார்.
இப்பேரணியில் கலந்து கொள்ள பொது மக்களும் , அனைத்து கட்சிகளும் அழைக்கப் பட்டு , பாலஸ்தீனர்களின் அவல நிலை குறித்த மலேசிய மக்களின் நிலைப்பாடு இன்னமும் மாறாமல் இருப்பதற்கான ஒரு தெளினவான சமிக்ஞ்யை அனைத்துலக சமூகத்திற்கு முன் வைக்கப்படும்.
இது குறித்து அமைச்சரவையில் விளக்கம் அளிக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்ட பிரதமர் , வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பேரணியில் எடுக்கப்படும் நிலைப்பாடு , மலேசியாவின் மிகத் தெளிவான செய்தியாக இருக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.