17 மொழிகளில் அசத்தும் சிறுவன்

ஷா ஆலம், ஆகஸ்ட் 02-

தனது தந்தைவுடன் இணைந்து 17 மொழிகளில் பேசும் ஆற்றலைக்கொண்ட 6 வயது சிறுவனின் அசத்தலான பன்முகமொழித் திறனை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் மிகுந்த கவன ஈர்ப்பாக மாறி வருகிறது.

டிக் டாக் கணக்கில் பதிவெற்றம் செய்யப்பட்டுள்ள உள்ளூரைச் சேர்ந்த எம் சத்ரியன் ஒரு மொழி, இரண்டு மொழி அல்ல. 17 மொழிகளில் சரளமாக பேசுவது அந்த சிறுவனிடம் காணப்படும் அபார ஞாபக சக்தியை மதிப்பிட முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது. தனது இரண்டு பிள்ளைகளில் மூத்தவரான சத்ரியன்வ் மலாய் , அரபு , ஆங்கிலம் , இந்தொனிசியா , ஜப்பான், ஸ்பெயின் , உருது , தமிழ் , கொரியா , ரஷ்யா உட்பட 17 மொழிகளில் ஆளுமை கொண்டுள்ளதாக அந்த 6 வயது சிறுவனின் தந்தை 37 வயது எம். மோகனசுந்தரம் கூறுகிறார்.

தனது மகன் பிறந்தது முதல் அவனை கையில் எதவுது ஒரு காகிதம் இருக்க வேண்டும். அதுவே காலப்போக்கில் காகிதம் பென்சில் கையுமாக இருப்பதைக்கான முடிந்ததாக கணக்கியலாளராக பணிபுரியும் மோகனசுந்தரம் குறிப்படுகிறார் .

சத்ரியனுக்கு மற்ற சிறுவர்களைப் போல விளையாட்டுப் பொருட்களில் நாட்டம் கிடையாது . மாறாக படிப்பதிலும் ,எழுதுவதிலும் , ஞாபகப்படுத்திக் கொள்வதிளுமே தனித்துவமான திறனை கொண்டுள்ளதாக மோகனசுந்தரம் கூறுகிறார்.

அவனது உற்ற நண்பர் புத்தகம்தான் , கைபேசி , வீடியோ போன்ற தொடர்பு சாதனங்களை கொடுத்து அவனை ஊக்குவிப்பது கிடையாது .

ஆனால் , அவனது அறிவுத்திறனை சோதிக்கும் புதிர் விளையாட்டு மற்றும் Dualinggo ABC போன்ற பாடத்திட்டங்களை அதிகமாக பார்க்கிறேன் .ஒரு மொழியில் ஒரு சொல்லை படித்து விட்டு அதனை மறுபடியும் படிக்க வேண்டியதில்லை . அவன் படித்து அந்த சொல்,உடனடியாக அவனது நினைவில் பதிவு செய்யப்படுவதெ அவனது சிறப்பாகும் என்று மோகனசுந்தரம் குறிப்பிடுகிறார்.

சத்ரியனின் திறனை கண்டு ஆச்சரியபடும் மக்கள் ,இது அசாத்தியமான சக்தி என்று தங்கள் கருத்தை பதிவேற்றம் செய்துள்ளனர். இச்சிறுவனின் காணோளியை கடந்த ஜூலை 18 ஆம் தேதி வரையில் 51 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர், ஒரு லட்சத்து 16 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளார்கள். 14 ஆயிரம் முறை பகிரப்பட்டுள்ளது என்று முகநூல் பதிவால் தெரியவந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS