புத்ராஜெயா,ஆகஸ்ட்02-
பத்து ஆண்டுகள் அல்லது அதற்கும் கூடுதலான காலத்திற்கு B1 ( பி ஓன் ) மற்றும் B2 ( பி டூ ) வாகனமோட்டும் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு, சிறப்பு புகுமுகத் திட்டத்தின் கீழ் வரும் அக்டோபர் மாதம் முதல் B முழு லைசென்ஸை பெறத் தகுதி பெறுகின்றனர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட வாகனமோட்டும் லைசென்ஸ்ஸை கொண்டிருப்பவர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ததாக வேண்டும் என்று அமைச்சர் விளக்கினார்.
சிறப்பு புகுமுக திட்டத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதுடன் 160 வெள்ளி கட்டணத்தை செலுத்தி, வாகனமோட்டும் பயிற்சிப்பள்ளிகளில் 500 C.C. க்கும் கூடுதலான இயந்திர சக்தியைக்கொண்ட மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இந்த பயிற்சியை பெறுவதற்கும், அது தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்கும், கூடுதல் சக்தியைக்கொண்ட மோட்டார் சைக்கிள்களை கையாளுவதற்கான அடிப்படை கூறுகளை தெரிந்து கொள்வதற்கும் அவர்கள் செலவிட வேண்டிய நேரம் சுமார் 2 மணி நேரம் மட்டுமே என்று அமைச்சர் அந்தோணி லோக் விளக்கினார்.