கார் நிறுத்தும் இடத்தை கைப்பற்றுவதில் போட்டாப் போட்டி / தகராற்றில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது

பினாங்கு, ஆகஸ்ட் 02-

பினாங்கு, கேபாலா பட்டாஸ் – ஸில் ஒரு பசார் ராயா- வில் கார் நிறுத்தும் இடத்தை கைப்பற்றுவதில் இரண்டு பெண்களுக்கு மத்தியில் வாய்ச் சண்டை பெரும் தகராறாக மாறிய சம்பவம் தொடர்பில் அவ்விரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளர்.

பொது இடத்தில் அந்த இரு பெண்களும் வாய்ச்சண்டையில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் வசைமாறி பொழிந்து கொண்டு தகராறு செய்து கொண்ட காட்சியைக் கொண்ட 56 விநாடி கொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து போலீசார் இரண்டு புகார்களை பெற்றுள்ளதாக செபராங் பேரை உத்தரா மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

25 மற்றும் 38 வயதுடைய அந்த இரு பெண்களும் கடந்த ஜுலை 29 ஆம் தேதி மற்றும் ஜுலை 30 ஆம் தேதி செய்து கொண்ட போலீஸ் புகாருக்கு பின்னர் இருவரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் பசார் ராயா சன்ஷைன் – னில் நடைபெற்றதாக விசாணையில் தெரியவந்துள்ளது. தாங்கள் கார் நிறுத்தும் ஒரே இடம், யாருக்கு சொந்தம் என்பதில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கிட்டத்தட்ட இருவரும் மோதிக்கொள்ளும் அளவிற்கு இட்டுச்சென்றது.

இதில் ஒருவருக்கொருவர் நடந்து கொண்டு விதத்தை வீடியோ பதிவு செய்த போது நிலைமை மோசமானதாக அனுவார் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார்.

பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றவியல் சட்டம் 160 கீழ் இருவர் மீதும் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS