கோலா பிலா, ஆகஸ்ட் 02-
கோலா பிலா, தெரசி அருகில் ஜாலான் சிரம்பான் – கோலபிலா சாலையின் 23 ஆவது கிலோ மீட்டரில் ஒரு லாரியும், ஒரு காரும் சம்பந்தப்பட்ட விபத்தில் போதைப்பொருள் சம்பந்தப்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வரும் தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.
அவ்விரு வாகனங்களின் ஒட்டுநர்களையும் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர்கள் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோல பிலா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் அமரன் மோஹட் கனி தெரிவித்தார்.
காலை 11 மணியளவில் Nissan ரக லாரி, சிரம்பானிலிருந்து கோல பிலாவை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் அதன் எதிர்திசையில் Proton Saga கார் வந்து கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதில் இரு வானங்களின் ஓட்டுநர்களும் காயம் அடைந்ததாக அவர் மேலும் கூறினார்.