கோலாலம்பூர், ஆகஸ்ட் 02-
கிள்ளான் ஜோஹன் செட்டியா- வையும், பெட்டாலிங் ஜெயா,பந்தர் உத்தமா-வையும் இணைக்கும் மூன்றாவது LRT ரயில் திட்டத்தின் மின்சாரப் பணிகள் பொருத்தப்படும் குத்தகை வேலைகள் நடைபெற்று வரும் வேளையில் அதன் கேபல்களை திருடியதாக நம்பப்படும் ஐவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குத்தகைத் தொழிலாளர்களான அந்த ஐவரும் 25 லட்சம் வெள்ளி இழப்பு ஏற்படும் அளவிற்கும் கட்டுமானத் தளத்திலிருந்து கேபல்களை திருடியுள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஜைன் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 32 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடையவர்களில் ஒரு பாகிஸ்தான் பிரஜையும் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டார்.
LRT 3 திட்டத்தின் செக்ஷன் 2, செக்ஷன் 14 மற்றும் காயு ஆரா டமன்சரா ஆகிய மூன்று கட்டுமானத் தளங்களில் அவர்கள் கேபல்களை திருடியுள்ளதாக நம்பப்படுகிறது என்று முகமது ஷுஹைலி தெரிவித்தார்.