வட சென்னை சந்திரா மீண்டும் வருவாள்… ஆண்ட்ரியா கொடுத்த அப்டேட்!

இந்தியா, ஆகஸ்ட் 03-

வெற்றிமாறன் தனுஷ் வெற்றிக்கூட்டணியில் அமைந்த முக்கியமான படமாக வடசென்னை அமைந்தது. இந்த படம் மொத்தம் 3 பாகங்களாக உருவாக இருந்த நிலையில் முதல் பாகம் மட்டுமே ரிலீஸானது. அடுத்த பாகங்களுக்கான அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த வாத்தி பட விழாவில் இதுபற்றி நடிகர் தனுஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ் “அதை நீங்க வெற்றிமாறன் அலுவலகத்துலதான் கேக்கனும். கண்டிப்பா வடசென்னை 2 வரும்” எனக் கூறியிருந்தார்.

விடுதலை படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்துகொண்டு பேசி வெற்றிமாறனிடம் இதுபற்றி தொகுப்பாளர் அப்டேட் கேட்டார். அப்போது பேசிய வெற்றிமாறன் “விடுதலை இரண்டு பாகங்களும் ரிலீஸ் ஆனதும் வாடிவாசல் தொடங்கும். அதன் பின்னர் வடசென்னை 2 தொடங்கப்படும்” எனக் கூறியிருந்தார். ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடந்தது போல தெரியவில்லை.

இந்நிலையில் இப்போது இந்த படம் குறித்து பேசியுள்ள ஆண்ட்ரியா, “வடசென்னை 2 படம் வந்தால் கண்டிப்பாக நான் சந்திராவாக நடிப்பேன்” எனக் கூறியுள்ளார். வடசென்னை முதல் பாகத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்த சந்திரா கதாபாத்திரம் கதையின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக உருவாக்கப்பட்டிருக்கும்.

WATCH OUR LATEST NEWS