கிளந்தான்,ஆகஸ்ட் 03-
கிளந்தான், Gua Musang நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட Nenggiri சட்டமன்ற இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனலுக்கும், பெரிக்காத்தான் நேஷலுக்கும் இடையில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.
பாரிசான் நேஷனல் சார்பில் கிளந்தான் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Mohd Azmawi Fikir Abdul Ghani- க்கும், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் Bersatu கட்சியில் இணைந்துள்ள முன்னாள் பாஸ் கட்சி உறுப்பினர் Mohd Rizwadi Ismail- க்கும் இடையில் போட்டி ஏற்பட்டது.
Nenggiri சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று சனிக்கிழமை காலையில் Gua Musang மாவட்ட மன்றத்தின் Komplex Perdana, Dewan Perdana சமூக மண்டபத்தில் நடைபெற்றது.
வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த இடைத்தேர்தலில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளதாக தேர்தல் திகாரி Nik Raisnan Daud தெரிவித்தார்.