பினாங்கு,ஆகஸ்ட் 03-
பினாங்கு, Campbell Street – டில் உள்ள ஓர் உணவகத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் அந்த உணவகத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமுற்றது.
இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கியஸ் கலனிலிருந்து வாயு கசிந்ததன் காரணமாக இந்த வெடி சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் என்ற நம்பப்படுவதாக பினாங்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
அதிகாலை 5.32 மணியளவில் கிடைத்த அவசர அழைப்பைத் தொடர்ந்து Lebuh Pantai- யிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.உணகத்தின் சமையல் அறையின் கூரை, இரும்புக்கதவு மற்றும் இதரப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து புலன் விசாரணை செய்வதற்கு இவ்விகாரம் போலீஸ் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.