சரவாக்,ஆகஸ்ட் 03-
சரவாக், பிந்துலுவில் உள்ள எண்ணெய் துரப்பண மேடை அருகில் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட வெடி சம்பவத்தில் இரு கப்பல் பணியாளர்கள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நேற்று இரவு 10.40 மணியளவில் நிகழ்ந்ததாக தகவல் பெறப்பட்டது என்று சரவா மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் தலைமை செயல்முறை அதிகாரி Hendery Ardimanshah தெரிவித்தார்.
தகவல் கிடைத்து மூன்று EMRS அம்புலன்ஸ் வண்டிகளும், Bintulu மருத்துவமனையின் 5 அம்புலன்ஸ் வண்டிகளும் Bintullu துறைமுக படகுத்துறைக்கு விரைந்ததாக அவர் குறிபிட்டார்.
கப்பலின் இயந்திரப் பகுதியில் இந்த வெடி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பேரா மாநிலத்தைச் சேர்ந்த 36 வயது உதவி பொறியியலாளர், சபாவைச் சேர்ந்த 22 வயது உதவியாளர் தீக்காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று Hendery Ardimanshah தெரிவித்தார்.