கார் விலகி, சாலைத் தடுப்பை மோதியதில் ஆடவர் மரணம்

பயான் லெபாஸ், ஆகஸ்ட் 05-

sports utility வாகனம் ஒன்று, சாலையை விட்டு விலகி, மோட்டார் சைக்கிள் செல்லும் வழித்தடத்தில் நுழைந்து, சாலை தடுப்பை மோதி, சிக்கிக்கொண்டதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று காலை 5.50 மணியளவில் பினாங்கு, பயான் லெபாஸ், சுல்தான் அப்துல் ஹலீம் முஅத்ஸம் ஷா பாலத்தின் 18.2 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

இதில் M. குணா என்று அடையாளம் கூறப்பட்ட நபர், பலத்த காயங்களுங்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக பினாங்கு, Barat Daya மாவட்ட போலீஸ் தலைவர் Superintenden Kamarul Rizal Jenal தெரிவித்தார்.

Proton X50 ரக அந்த sports utility வாகனம் , சாலைத்தடுப்பு மீது ஏறி, சிக்கிக்கொண்டதால், வாகனத்திற்குள் சிக்கிய நபரை மீட்பதற்கு தாங்கள் தீயணைப்பு, மீட்புப்டையினரின் உதவியை நாடியதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த வாகனம், லோரி ஒன்றின் பின்புறம் மோதியதாக அதன் ஓட்டுநரிடமிருந்து புகார் கிடைத்து இருப்பதால் இந்த விபத்து எவ்வாறு நடந்தது என்பதை கண்டறிவதற்கு ரகசிய கேமராவின் பதிவை தாங்கள் சோதனையிடவிருப்பதாக Superintenden Kamarul தெரிவித்தார்.

உயிரிழந்த நபர், செல்லத்தக்க வாகனமோட்டும் உரிமத்தை கொண்டுள்ளார். ஆனால், வாகனத்தின் சாலை வரி சிட்டையான RoadTax, கடந்த மார்ச் மாதம் காலாவதியாகிவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS