சாலையில் சாகசம் புரிந்த இருவர் பலி

கிள்ளான், ஆகஸ்ட் 05-

கிள்ளானில் இன்று அதிகாலையில் சாலையில் அதிபயங்கரமாக மோட்டார் சைக்கிள் சாகசம் புரிந்த இளைஞர் கும்பலில் இருவர், கடும் காயங்களுக்கு ஆளாகி மாண்டனர்.

பெர்சியரான் ராஜா மூட -வில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 16 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்தனர் என்று தென் கிள்ளாள் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.

இந்த விபத்தில் Yamaha 125ZR, Yamaha Lagenda 115Z, Yamaha Y16ZR மற்றும் Honda RS-X FS150 ஆகிய நான்கு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பாண்டமாறன், கொம்ப்ளெக்ஸ் சுகன் பாண்டமாறன்- னிலிருந்து கோலக்கிள்ளான் வரை, கோலாவின் (KOLA-வின்) முதன்மை சாலையை பந்தயக் களமாக மாற்றி, மோட்டார் சைக்கிள்களில் படுவேகமாக பல சுற்றுக்களை சுற்றி வந்த போது இந்த பயங்கர மோதல் நிகழ்ந்தது.

இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். மற்றொருவர், கிள்ளான், தேங்கு அம்புவான் ரஹிமாமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாண்டதாக ஏசிபி சா ஹூங் ஃபாங் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS