பகிரங்க மன்னிப்பு கோரினார் துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட்

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 05-

கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் Axiata Arena அரங்கில் நடைபெற்ற பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான பேரணியில் எதிர்பாரதவிதமாக இஸ்ரேல் வாழ்க ……..இஸ்ரேல் வாழ்க…….. என்று தவறுதலாக முழுக்கமிட்டதற்காக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, இன்று பகிரங்க மன்னிப்புக் கோரினார்.

அந்த தேசிய அரங்கில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக கடலலையைப் போல் திரண்டிருந்த மக்களின் உற்சாகமிகுந்த கூட்டத்தைக் கண்டு, உணர்ச்சி வசப்பட்டு விட்ட தாம், உரையின் போது, இஸ்ரேல் வாழ்க…. என்று தவறுதலாக முழக்கமிட்டு விட்டதாக அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

நடந்த தவற்றுக்கு மன்னிப்புக் கோரும் அதேவேளையில் தூய உள்ளத்துடன் சுதந்திர பாலஸ்தீனம் வாழ்க………… சுதந்திர பாலஸ்தீனம் வாழ்க…………. என்று முழுக்கமிவடுதாக இன்று தனது முகநூலில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஜாஹிட் தெரிவித்துள்ளார்.

நேற்றைய பேரணியில் இஸ்ரேல் வாழ்க……. என்று ஜாஹிட் முழுக்கமிட்ட போது, மக்கள் பாலஸ்தீனம் வாழ்க என்று முழக்கமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS