பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 05 –
திரெங்கானு மாநிலத்தில் கோயில் ஒன்றின் வருடாந்திர திருவிழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பெண் பாடகர்கள் மேடையில் தோன்றுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அந்த மாநிலத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் இன்று தற்காத்துப் பேசினார்.
அதேவேளையல் பிற மதத்தினருக்கு எதிராக பாஸ் தலைமையிலான திரெங்கானு அரசு, ஓர வஞ்சனையுடன் செயல்படுகிறது என்று கூறப்படும் குற்றச்சாட்டை அந்த மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் வான் சுகைரி வான் அப்துல்லா மறுத்தார்.
திறந்த வெளியில், பொது நிகழ்வுகளில் பெண் பாடகர்கள் மேடையில் தோன்றிப் பாடுவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.
Guan Di சீன சமூகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கலைவிழா, பொதுவில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வாகும். இது மாநில பொழுது போக்கு நிகழ்விற்கு மாநில அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டலை மீறுவதாக உள்ளது. எனவேதான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.