இன்னும் எந்தவொரு நோட்டீஸையும் பெறவில்லை

ஈப்போ , ஆகஸ்ட் 05-

பெர்சத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளை காலி செய்ய வேண்டியதில்லை என்று மக்களவை சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் செய்துள்ளார். அந்த முடிவைத் தொடர்ந்து பெர்சத்து கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக இதுவரையில் எந்தவொரு அறிக்கையையும் அக்கட்சியிடமிருந்து தாம் இன்னும் பெறவில்லை என்று சபா நாயகர் ஜோஹாரி அப்துல் இன்று அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் மக்களவை தொடர்பாக விவகாரங்களில் சபா நாயகர் எடுக்கக்கூடிய முடிவே தீர்க்கமானதாகும் என்று ஜோஹாரி அப்துல் Johari Abdul விளக்கினார்.

அதேவேளையில் சபா நாயகர் என்ற முறையில் தாம் எடுத்துள்ள இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் சவால் விடுவதற்கு இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது என்பதையும் ஜோஹாரி அப்துல் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS