தீ விபத்தில் மாது கருகி மாண்டார்

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 05-

பெட்டாலிங் ஜெயா, பாரமவுண்ட் கார்டன்- னில் அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் வீடு ஒன்று தீப்பற்றிக்கொண்டதில் மாது ஒருவர் கருகி மாண்டார்.

இத்தீவிபத்து தொடர்பாக இன்று மாலை 5.42 மணியளவில் தீயணைப்புப்படையினர், ஓர் அவசர அழைப்பை பெற்றதாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

டமன்சாரா – தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வண்டியுடன் 10 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒன்றாவது மாடியில் உள்ள அந்த அபார்ட்மெண்ட் – வீட்டின் ஓர் அறை முற்றாக தீயில் அழிந்தது.

அறையை சோதனையிட்ட போது 60 விழுக்காடு தீக்காயங்களுடன் மாது ஒருவர் கட்டிலில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS