செரம்பன், ஆகஸ்ட் 06-
பதிநான்கு ஆயிரம் வெள்ளி லஞ்சம் பெற்றது தொடர்பில் நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரிகள் இருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.
அந்த இரு அதிகாரிகளும், சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவர்களை ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான ஆணையை SPRM பெற்றுள்ளது.
நிறுவனத்திற்கு கணினி மற்றும் இதர உபகரணங்களை வாங்குவதில் விநியோகிப்பாளரை நியமிப்பதில் 30 மற்றும் 40 வயதுடைய அந்த இரு நபர்களும் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.