குற்றச்சாட்டை மறுத்தார் போலீஸ் படைத் தலைவர்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 06-

அரச மலேசிய போலீஸ் படையின் உயர்மட்ட அதிகாரிகள் மத்தியில் மிகப்பெரிய சீரமைப்பு ஏற்படப்போவதாக வெளிவந்துள்ள தகவலை போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் வன்மையாக மறுத்துள்ளார்.

அரச மலேசியப் போலீஸ் படையின் உயர் அதிகாரி ஒருவர், அப்படையிலிருந்து இடம் மாற்றம் செய்யப்படுவார் என்று உள்ளூர் இணைய செய்தித் தளம் வெளியிட்டுள்ள செய்தி உண்மை அல்ல என்று ஐஜிபி விளக்கினார்.

சம்பந்தப்பட்ட இணைய செய்தித் தளம் வெளியிட்டுள்ள செய்தியை அர்த்தப்படுத்தக்கூடிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையையும் அரச மலேசியப் போலீஸ் படை வெளியிட வில்லை என்பதையும் டான்ஸ்ரீ ரஸாருதீன் விளக்கினார்.

இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இணைய செய்தித் தளத்தை புக்கிட் அமான் தொடர்பு கொண்டுள்ளது. ஆனால். அத்தகைய செய்தி எவ்வாறு கிடைத்தது, அதனை தந்தவரின் அடையாளத்தை வெளியிட அந்த செய்தித் தளம் மறுத்து விட்டதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS