தீ விபத்தில் கணவன், மனைவி கருகி மாண்டனர்

மிரி,ஆகஸ்ட் 06-

சரவாக்,மிரி, கம்போங் பங்கலான் லுடோங்- கில் ஒரு வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் வயதான தம்பதியர் கருகி மாண்டனர்.

இச்சம்பவம் இன்று காலையில் நிகழ்ந்தது. அந்த இரண்டு மாடி வீட்டின் குளியல் அறையில் கணவன், மனைவியின் கருகிய உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக சரவாக் மாநில செயலாக்க நடவடிக்கை மையப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதில் 77 வயது கணவரும், 64 வயது மனைவியும் உயிரிழந்ததாக அப்பேச்சாளர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS