SIK , ஆகஸ்ட் 06-
மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்ததில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய ஐந்தாம் படிவ மாணவன் ஒருவன் உயிரிழந்தான்.
இச்சம்பவம் இன்று காலை 7.44 மணியளவில் கெடா, SIK, கம்போங் சாருக் சிரே என்ற இடத்தில் நிகழ்ந்தது. 17 வயது முஹம்மது ஆசிப் முஹம்மது ஜாஹித் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த மாணவன், மோட்டார் சைக்கிளுடன் சிக்கி, தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டான்.
அந்த மாணவன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும், இதில் குற்றத்தன்மையில்லை என்றும் SIK மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ரசாக் உஸ்மான் தெரிவித்தார்.