கோலாலம்பூர், ஆகஸ்ட் 06-
தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறிக்கொண்டு மியன்மார் பிரஜை ஒருவரிடம் கொள்ளையடித்த இரண்டு நபர்களுக்கு கோலாலம்பூர், செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஓராண்டு சிறை மற்றும் மூன்று பிரம்படித் தண்டனை விதித்தது.
31 வயது முஹம்மது ஷஹரல் உமர் மற்றும் 28 வயது மட் யுஸ்ரி மேட் ஒஸ்மான் என்ற அந்த இரு நபர்களும் கடந்த ஜுன் 29 ஆம் தேதி இரவு 9 மணியளவில் கோலாலம்பூர், செந்தூலில் உள்ள ஒரு பேரங்காடி வளாகத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த இருவரும், 32 வயதுடைய மியன்மார் பிரஜையிடமிருந்து 1,500 வெள்ளி ரொக்கம், கைப்பேசி மற்றும் முக்கிய ஆவணங்களை உள்ளடக்கிய கைப்பை ஆகியவற்றை கொள்ளையிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.