கோலாலம்பூர், ஆகஸ்ட் 07-
மலேசியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் முதலீட்டு மோசடி; மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தல்
கடந்த ஆண்டு தொடங்கி தற்போது வரை நாட்டில், 875.4 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்தி மொத்தம் 8 ஆயிரத்து 655 முதலீட்டு மோசடி குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஐயாயிரத்து 724 பேர் கடந்த ஜூலை மாதம் வரை கைது செய்யப்பட்டிருப்பதாக புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, நாட்டில் முதலீட்டு மோசடி தொடர்பான குற்றங்கள் அதிகரித்தி வருவதால், மக்கள் பேராசையினால் இணையம் வாயிலாக அனுப்பபடும் செய்திகளை நம்பி பணத்தை அளித்து ஏமாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மலேசிய பாதுகாப்பு ஆனையம் மற்றும் பேங்க் நெகாரா மலேசியா என்று போர்வையில், பல இணைய முதலீட்டு மோசடிகள் பதிவாகியிருப்பதையும் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, சந்தேகத்திற்குரிய முதலீட்டுச் சலுகைகள் ஏதேனும் கிடைத்தால் முதலில் சரிபார்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.