புத்ராஜெயா,ஆகஸ்ட் 07-
மலேசியா-தாய்லாந்து உடனான சிறப்புப் பொருளாதார மண்டலம் SEZ, தனியார் துறைகள் மற்றும் தொடக்க நிறுவனங்களின் ஈடுபாட்டுடன் நிறுவப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் மாரிஸ் சங்கியம்பொங்சா நேற்று பிரதமர் அலுவலகத்திற்கு வந்திருந்த போது, அந்த பரிந்துரையை பிரதமர் முன்வைத்துள்ளார்.
அதைத் தவிர்த்து, சுங்கை கோலோக் ஆற்றை வணிக தலமாக மாற்றுவது குறித்தும், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் எதிர்நோக்குகின்ற வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகப் பிரதமர் தகவல் வெளியிட்டுள்ளார்.