வினேஷ் போகத் தகுதி நீக்கம் – 50 கிலோவிற்கு அதிகமாக உடல் எடை இருந்ததால் இறுதிப் போட்டியிலிருந்து நீக்கம்!

பாரிஸ்,ஆகஸ்ட் 07-

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ பிரிவில் வினேஷ் போகத் முதல் இந்திய வீராங்கனையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த நிலையில் தற்போது அதிக உடல் எடை காரணமாக இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள்ளார்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்னும், 4 நாட்களில் ஒலிம்பிக் தொடர் முடிவடைகிறது. இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கம் மட்டுமே கைப்பற்றியிருந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் எப்போது கைப்பற்றும் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS