பாரிஸ்,ஆகஸ்ட் 07-
பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான மல்யுத்த 50 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் 4 முறை ஒலிம்பிக் சாம்பியனான யுய் சுசாகியை தோற்கடித்து அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிருக்கான 50 கிலோ பிரிவில் 16ஆவது சுற்று போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுய் சுசாகியை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழத்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் மல்யுத்த போட்டியில் விளையாடி வரும் சுசாகி இதுவரையில் 5 போட்டிகளில் மட்டும் தோல்வி அடைந்திருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் ஒரு புள்ளி கூட இழக்காமல் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். காமன்வெல்த், உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் ஆசிய போட்டிகளில் பதக்கங்கள் வென்றிருந்தாலும் இதுவரையில் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட கைப்பற்றவில்லை.

இந்த நிலையில் தான் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கும் அரையிறுதிப் போட்டியில் கியூபா நாட்டைச் சேர்ந்த குஸ்மான் லோப்ஸை எதிர்கொள்கிறார். இதில் அவர் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார். இதன் மூலமாக அவர் தங்கம் அல்லது வெள்ளி அல்லது வெண்கலப் பதக்கம் கைப்பற்றுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பான் நாட்டின் யுய் சுகாசியை தோற்கடித்து வினேஷ் போகத் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த அப்போதைய பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் உள்பட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். அப்போது தெருவிலேயே தனது பயிற்சியை வினேஷ் போகத் மேற்கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.