சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு தாவிய சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை… மகாநதி சீரியலில் இனி கங்கா இவர் தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கங்காவாக நடித்து வந்த திவ்யா கணேஷ் விலகியதால் அவருக்கு பதில் யார் நடிக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

விஜய் டிவியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மகாநதி. இந்த சீரியலை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். தந்தையை இழந்த நான்கு சகோதரிகளின் உணர்வுப்பூர்வமான கதையம்சத்துடன் மகாநதி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் லட்சுமி பிரியா, திவ்யா கணேஷ், ஆதிரை, காவ்யா ஆகியோர் சகோதரிகளாக நடித்து வந்தனர். இவர்களின் தந்தையாக சரவணனும், தாயாக சுஜாதா சிவகுமாரும் நடித்துள்ளனர்.

இந்த சீரியல் டிஆர்பியிலும் பட்டைய கிளப்பி வருகிறது. இந்த சீரியலில் கங்கா கேரக்டரில் நடித்து வந்த திவ்யா கணேஷ், திடீரென அந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் திவ்யா கணேஷ். இதனால் அவரால் மகாநதி ஷூட்டிங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததால் வேறுவழியின்றி திவ்யா கணேஷுக்கு பதில் வேறு நடிகையை தேர்வு செய்துள்ளனர்.

இதனால் இனி மகாநதி சீரியலில் கங்காவாக நான் தொடர மாட்டேன் என திவ்யா கணேஷ் அறிவித்ததோடு, தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வந்தனர். அது ஒருபுறம் இருக்க மகாநதி சீரியலில் திவ்யா கணேஷ் நடித்து வந்த கங்கா கேரக்டரில் இனி யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.

WATCH OUR LATEST NEWS