மலாக்கா,ஆகஸ்ட் 07-
தளவாடப் பொருட்கள் விற்பனை கடைக்கு வேலைத் தேடி வந்த 22 வயது இளைஞரை ஓரினப்புணர்ச்சி செய்ததாக கூறப்படும் பாகிஸ்தான் ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
36 வயதுடைய அந்த பாகிஸ்தான் ஆடவர், இன்று காலையில் மலாக்கா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஷரதா ஷீன்ஹா முகமது சுலைமான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராக போலீசார் 5 நாள் தடுப்புக்காவல் அனுமதியைப் பெற்றனர்.
மலாக்கா, தஞ்சங் மின்யாக், தாமன் தஞ்சங் மின்யாக் சேடியா- வில் உள்ள தடவாடப் பொருட்கள் விற்பனைக் கடையின் மேல்மாடியில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர் செய்து கொண்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் அந்த பாகிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலை தேடி வந்த இளைஞரை, நிர்வாகியைப் பார்க்க அழைத்துச் செல்வதாக கூறி, மேல்மாடிக்கு வரச்சொல்லி. அந்த நபரை அறையில் தள்ளி பாலியல் வல்லுறவு புரிந்ததாக அந்த பாகிஸ்தான் ஆடவருக்கு எதிராக புகார் செய்யப்பட்டுள்ளது.