மோட்டார் சைக்கிளோட்டிகள் திருப்பி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 07-

கடந்த ஞாயிற்றுக்கிழமை பட்டர்வொர்த் புறவட்ட நெடுஞ்சாலையான லெபுராயா லிங்ககரன் லுார் பட்டர்வொர்த் சாலையில் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிளோட்டிகள், திடீரென்று எதிர்திசையை நோக்கி பயணித்தது, மற்ற வாகனமோட்டிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இது தொர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது. ஒரு வழித்தடத்தில் திடீரென்று அதிகமான மோட்டார் சைக்கிளோட்டிகள் எதிர்திசையில் வருவதைக் கண்டு, வாகனமோட்டிகள் ஆராய்ந்துள்ளனர்.

இரவு 9 மணியளவில் அந்த நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள போலீசாரின் சாலைத் தடுப்பு சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக முறையான வாகன உரிமத்தைக் கொண்டிருக்காதது மற்றும் இதர குற்றங்கள் காரணமாக மோட்டார் சைக்கிளோட்டிகள் வந்த வழியிலேயே தங்கள் மோட்டார் சைக்கிள்களை திருப்பியுள்ளனர் என்று செபராங் பேரை உதர மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

பிளாசா டோல் பாகன் அஜம் – மிலிருந்துடெர்மினல் கோண்டேனா பட்டர்வார்ட் உதாரா வரையில் படுவேகத்தில் அந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் எதிர்திசையில் வந்தது ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக்கொண்டதாகும் என்று ஏசிபி அனுவார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS