பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 07-
சிலாங்கூர், செராஸில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் போதையை தரவல்ல கேடும் பானத்தை தயாரித்ததாக நம்பப்படும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு போலீஸ்காரரும் அடங்குவர். கைது செய்யப்பட்ட இதர 6 நபர்கள் அந்நிய நாட்டவர்கள் ஆவர்
என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்தார்.
இந்த கைது நடவடிக்கை தொடர்பில் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் இரண்டு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டதாக டத்தோ ஹுசைன் ஓமர் குறிப்பிட்டார்.