ஓட்டப்பந்தய மாவீரன் உசைன் போல்ட் 2011 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் ஓட்டப்பந்தயத்தில் தகுதியிழப்பு செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டே 100 மீட்டர் பிரிவில் சாதித்தார். எப்படி?
உசைன் போல்ட் வெற்றிகள் மட்டுமல்ல, அவரின் தோல்விகளும் எல்லோருக்கும் உத்வேகத்தை கொடுக்கக்கூடியவை. அந்தவகையில் தோல்வியில் இருந்து உசைன் போல்ட் மீண்டது எப்படி என்பதற்கான இந்த ஒரு சம்பவம், நீங்களும் தோல்வியில் இருந்து மீள்வதற்கு உதவியாக இருக்கும்.
ஓட்டப்பந்தய உலகின் மாவீரன் என்றால் இப்போது இருக்கும் குழந்தைகள் கூட கண்ணை மூடிக்கொண்டு உசைன் போல்ட் என கூறிவிடும். அந்தளவுக்கு அவர் ஓட்டப்பந்தயத்தில் சாதிக்காத சாதனைகளே மிச்சம் இல்லை.

உசைன் போல்ட் செய்திருக்கும் உலக சாதனைகளை இனியொருவர் முறியடிப்பாரா? என்பது கூட சந்தேகம் தான். அந்தளவுக்கு கற்பனைக்கு எட்ட முடியாத வேகத்தில் ஓடி பல சாதனைகளை படைத்திருக்கிறார். ஆனால், அப்பேர்பட்ட வெற்றிகளை பெற உசைன் போல்டும் சில தோல்விகளையும் அவமானங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.

அவரின் இந்த தோல்விகளும், அவமானங்களும் தான் போல்டின் அடுத்தடுத்த மகத்தான வெற்றிக்கு உந்துசக்தியாகவும் இருந்தது என்றால் மிகையல்ல. அந்தவகையில் உசைன்போல்ட் ஒருமுறை ஓட்டப்பந்தயத்தில் தகுதியிழப்பு ஆகி அடுத்த ஆண்டே அதே பிரிவில் சாதித்தது தான் மிகவும் சுவாரஸ்யமான கதை.