லாரியின் பின்புறம் மோதியதில் தோட்டக்காரர் பலி

குவாந்தன்,ஆகஸ்ட் 07-

4 Drive வாகனம் ஒன்று, லோரியின் பின்புறம் மோதியதில் அதன் ஓட்டுநர் பலத்த காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தார்..

இச்சம்பவம் இன்று மதியம் 12.30 மணியளவில் குவந்தான், ஜாலான் பிந்தாசன் குவாந்தன்- னில் நிகழ்ந்தது. ஒரு தோட்ட உரிமையாளரான 63 வயது ஜீ லென் ஃபாட் என்பவரே இவ்விபத்தில் மாண்டதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு அடையாளம் கூறினார்.

அந்த தோட்ட உரிமையாளர் செலுத்திய Toyota Hilux, 4 Drive வாகனம், சாலையோரத்தில் பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்த லோரியின் பின்புறம் மோதியதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் பலத்த காயங்களுக்கு ஆளான அந்த தோட்டக்காரர், சம்பவ இடத்திலேயே மாண்டதாக ACP Wan Mohd Zahari தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS