கொள்ளை முயற்சி, நான்கு ஆடவர்களை போலீஸ் தேடுகிறது

பெட்டாலிங் ஜெயா,ஆகஸ்ட் 07-

இன்று அதிகாலையில் சுபாங் ஜெயா, கேசாஸ் நெடுஞ்சாலையில் ஓர் எண்ணெய் நிலையத்தின் முன்புறம் ஒரு காரை சூழ்ந்துக்கொண்டு, கைத்தடிகளை ஆயுதமாக பயன்படுத்தி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆடவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளை முயற்சி தொடர்பாக அதிகாலை 1.37 மணியளவில் 37 வயதுடைய ஒரு டெக்னிஷனிடமிருந்து போலீசார் புகார் பெற்றிருப்பதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமத் தெரிவித்தார்.

அந்த எண்ணெய் நிலையத்தின் முன்புறம் காரை நிறுத்திய நபரை, மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், கைத்தடிகளால் காரின் கண்ணாடியை உடைத்த கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட ஆடவர்களின் அராஜக செயல், அந்த காரில் பொருத்தப்பட்டு இருந்த டாஷ்போர்டு கேமராவில் பதிவாகியுள்ளது. இதில் அந்த நான்கு நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை தேடும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளதாக வான் அஸ்லான் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS