பேரரசர் தம்பதியரின் அதிகாரப்பூர்வ புகைப்படம் நாளை வெளியிடப்படுகிறது

புத்ராஜெயா,ஆகஸ்ட் 07-

நாட்டின் 17 ஆவது பேரரசரான Sultan Ibrahim மற்றும் பேரரசி ராஜா ஜரித் சோபியா ஆகியோரின் அதிகாரப்பூர்வ உருவப்படங்கள் நாளை ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படவிருக்கின்றன.

பேரரசர் தம்பதியரின் அதிகாரப்பூர்வ உருவப்படங்களை மலேசிய தகவல் இலாகா நாளை பெறும் என்றும், இதர அமைச்சுகள் மற்றும் இலாகாக்கள் நாளை முதல் தொடர்புத்துறை அமைச்சிலிருந்து பெறலாம் என்றும் அதன் அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவித்துள்ளார்.

பேரரசர் தம்பதியரின் உருவப்படங்களை இலவசமாக பெற விரும்பும் பொது மக்கள், தத்தம் மாநிலங்களில் உள்ள தகவல் இலாகா அல்லது மாவட்ட அதிகாரிகளின் அலுவலகங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS