டத்தோ கரம் சிங் வாலியா-விற்கு பிரதமர் உதவி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 07-

இருதய நோய் மற்றும் சிறுநீரக கோளாறு போன்றவற்றினால் அவதியுற்று வரும் சுற்றுச்சூழல் மூத்த செய்தியாளர் டத்தோ கரம் சிங் வாலியா- விற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உதவிக் கரம் நீட்டியுள்ளார்.

கடந்த 90 ஆம் ஆண்டுகளில் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு குந்தகத்தை ஏற்படுத்கூடிய சுற்றுச்சூழல் தொடர்புடைய பல பிரச்னைகளை துணிந்து வெளிச்சம், போட்டுக்காட்டி, அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த முதன்மை செய்தியாளராக டத்தோ கரம் சிங் விளங்கினார்.

TV3 இன் முன்னாள் நிருபரான 65 வயது டத்தோ கரம் சிங், தற்போது எதிர்கொண்டுள்ள உடல் உபாதைச் பிரச்னையில் அவரின் நிதி சுமையை குறைக்கும் வகையில் பிரதமர் கணிசமான நிதி உதவியை வழங்கினார்.

பிரதமரின் அரசியல் செயலாளர் அஹ்மத் ஃபர்ஹான் பௌசி, அவ்வுதவியை அந்த மூத்த நிருபரிடம் இன்று நேரடியாக வழங்கி, நலம் விசாரித்தார்.

WATCH OUR LATEST NEWS