புத்ராஜெயா,ஆகஸ்ட் 07-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு சொந்தமான முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட உள்ளடக்கங்களில் ஒரு பகுதி அகற்றப்பட்டு இருப்பது தொடர்பில் Meta Platforms Incorporation- னிடமிருந்து .இன்னும் துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்துவதற்கும், / அரசாங்கத்திடமிருந்து கருத்துகள் மற்றும் உள்ளீடுகளை பெறுவதற்கும் / மெட்டா தனது கடப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதாக தொடர்புத்துறை அமைச்சருமான ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமை பிரதமரின் முகநூல் மற்றும் Instagram கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டதற்கு என்ன காரணம் என்பது பற்றிய துல்லியமான தகவல்களை தங்களால் பெறமுடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பாலஸ்தீனம் தொடர்பாக பிரதமரின் உள்ளடக்கங்களை அகற்றியதற்காக சமூக வலைத்தளங்களை நிர்வகித்து வரும் மெட்டா ,நேற்று அரசாங்கத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரியது.