ஆகஸ்ட் 08-
இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச அரங்கில் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இழந்துள்ளது. கொழும்பு பிரமதேசா அரங்கில் இன்று நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியை இலங்கை அணி பெற்றது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் சேர்த்தது. 249 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்களில் சுருண்டு 110 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது.

இதன் மூலம் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி 27 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணிக்கு எதிராக வென்றுள்ளது. கடைசியாக 2005ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இந்திய அணியிடம் இலங்கை அணி ஒருநாள் தொடரை பறிகொடுத்து வந்தநிலையில் அதற்கு 2024ம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
