ஒலிம்பிக்: பாரிஸ் நகரில் இருந்து வீடற்ற ஏழைகள் வெளியேற்றம் – ஏன்?

8 ஆகஸ்ட் 2024

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்க உலக நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் அங்கே குவிந்துள்ளனர்.

வீடற்றவர்களின் எண்ணிக்கை சாலைகளிலும் தெருக்களிலும் அதிகரிக்க துவங்கியதைத் தொடர்ந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளது அந்த நாடு.

பாரிஸில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள நகரங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிலருக்கு தற்காலிகமாக தங்கும் இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. அந்த நாட்டு அரசின் இந்த போக்கு, செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர்கள் அனுப்பப்படும் போது, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் அமைப்புகளின் சேவைகளை அவர்களால் பெற இயலாமல் போய்விடும் என்றும், அவர்களுக்கான உறுதியான தீர்வு கிடைக்காது என்றும் செயற்பாட்டாளர்கள் வாதிடுகின்றனர்.

WATCH OUR LATEST NEWS